இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும்பர் ஷெஹான் மதுஷங்கா. தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இலங்கையிலும் ஜூன் மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு அரசின் உத்தரவை மீறி மதுஷங்கா காரில் பயணித்ததாக காவல்துறையினர் அவரை நிறுத்தியுள்ளார். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹெராயின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுஷங்காவை கைது செய்த காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஷெஹான் மதுஷங்காவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மதுஷங்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்காக 2018ஆம் ஆண்டு அறிமுகமான ஷெஹான் மதுஷங்கா, வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனையடுத்து அவர் மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘இந்திய அணிக்காக மீண்டும் டி20 போட்டிகளில் களமிறங்குவேன்’ - ஹர்பஜன் சிங்!