இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானுமாக திகழ்பவர் பிஷன் சிங் பேடி. இவர் கடந்த சில நாள்களுக்கு முன் இருதய கோளாறு காரணமாக டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து பிஷன் சிங் பேடியின் உடல்நிலை முன்னேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிஷன் சிங் பேடி 273 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: டென்னிஸ் தரவரிசை: ஒசாகா, மெத்வதேவ் முன்னேற்றம்!