ETV Bharat / sports

இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவார்களா தென் ஆப்பிரிக்க வீரர்கள்? - கொரோனா வைரஸ்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, போட்டியின் முடிவுக்குப் பிறகு கைகுலுக்குவார்களா என்ற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் பவுச்சர் பதிலளித்துள்ளார்.

south-africa-players-likely-to-avoid-handshakes-with-team-india

author img

By

Published : Mar 10, 2020, 2:20 PM IST

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவரும் நிலையில், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதனால் தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய வீரர்களுடன் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கைகுலுக்குவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ஏனென்றால் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் போட்டியின் முடிவுக்குப் பிறகு இலங்கை வீரர்களுடன் கைகுலுக்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் நிச்சயம் கைகுலுக்குவோம் என அறிவிக்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா வைரஸால் கைகுலுக்குவதைத் தவிர்க்க அறிவுறுத்திவருகின்றனர்.

இது குறித்து பவுச்சரிடம் கேட்கையில், ''இந்தியாவில் இதுவரை 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் எங்கள் அணியினரின் ஆரோக்கியம், பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். எங்களிடம் தகுந்த பாதுகாப்புக் குழுவும், மருத்துவக் குழுவும் இருக்கின்றன.

அவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். ஒருவேளை இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்க்க வலியுறுத்தினால், எங்களுக்கு வேறு வழியில்லை'' என்றார்.

இதையும் படிங்க: #EXCLUSIVE: யு15 அணியில் இடம் கிடைக்காதபோது ஏமாற்றமாகவே இருந்தது: குல்தீப் யாதவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.