ETV Bharat / sports

#INDvSA: நிலை தடுமாறும் தென்னாப்பிரிக்கா... காப்பாற்றுவாரா டூ ப்ளஸிஸ்? - IND vs SA Live

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

#INDvSA
author img

By

Published : Oct 12, 2019, 12:43 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 254 ரன்கள் அடித்திருந்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தபோது, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தென்னாப்பிரிக்க அணியில் டி ப்ரூயின் 20 ரன்களிலும், அன்ரிச் நார்டே இரண்டு ரன்களிலும் களத்திலிருந்தனர். தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர்.

INDvSA
டி ப்ரூயின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியல் இந்திய அணி

முகமது ஷமியின் பந்துவீச்சில் அன்ரிச் நார்டே மூன்று ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஓரளவிற்கு களத்தில் தாக்குப்பிடித்த டி ப்ரூயின் 30 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 53 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றது.

இக்கட்டான நிலையில், ஜோடி சேர்ந்த கேப்டன் டூ ப்ளஸிஸ், டி காக் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. டூ ப்ளஸிஸ் - டி காக் ஜோடி 75 ரன்களை சேர்த்திருந்தபோது, அஸ்வின் இந்த ஜோடியைப் பிரித்தார். அஸ்வின் வீசிய 38ஆவது ஓவரின் கடைசிப் பந்தில், டி காக் 31 ரன்கள் எடுத்தபோது க்ளின் போல்டானார்.

INDvSA
டி காக்-கை அவுட் செய்த அஸ்வினை பாராட்டும் கோலி

இதனிடையே, பொறுப்புடன் பேட்டிங் செய்த டூ ப்ளஸிஸ் டெஸ்ட் போட்டியில், தனது 21ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். சற்றுமுன்வரை தென்னாப்பிரிக்க அணி 42 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்துள்ளது. டூ ப்ளஸிஸ் 52 ரன்களுடனும், சீனுராம் முத்துசாமி ஆறு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

INDvSA
பொறுப்புடன் பேட்டிங் செய்யும் டூப்ளஸ்ஸிஸ்

சரிவை நோக்கிச் செல்லும் தென்னாப்பிரிக்க அணியை டூ ப்ளஸிஸ் காப்பாற்றுவாரா அல்லது இந்திய அணி தனது சிறப்பான பந்துவீச்சினால் தென்னாப்பிரிக்க அணியை ஃபாலோ ஆன் செய்ய வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.