இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா முதல்முறையாக இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம், 13 அரைசதம் உட்பட 1716 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், திருவனந்தப்புரத்தில் இந்திய ஏ அணிக்கு எதிரான அதிகாரமற்ற தொடருக்கான தென்னாப்பிரிக்க ஏ அணியின் கேப்டனாகவும் இவர் விளங்கினார்.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 15ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் குறித்து அவர் கூறுகையில்,
"தர்மசாலாவில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பல நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்திய அணி வலுவான அணியாக இருக்கிறது. எங்களது அணியில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இளம் அணியாக இந்தியாவை எதிர்கொள்வது சற்று கடினமானதுதான். இருந்தாலும், இதைக் குறையாக கருதாமல் டி20 தொடரை வெல்வதுதான் எங்களது குறிக்கொள். இந்திய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் தனி தனி பிளான் வைத்துள்ளோம். அதன்படி அவர்களை அவுட் செய்வோம்" என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 வரும் 15ஆம் தேதி தர்மசாலாவில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.