ETV Bharat / sports

கடும் சூழலில் விளையாடிய வீரர்களுக்கு நன்றி - கங்குலி - முதல் டி20 கிரிக்கெட் போட்டி

டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவிவரும் சூழலில் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்தியா, வங்கேதச வீரர்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.

ganguly
author img

By

Published : Nov 4, 2019, 10:34 AM IST

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. முன்னதாக இப்போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. தீபாவளிப் பண்டிகைக்குப் பின் டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததாக அம்மாநில அரசு வெளியிட்ட காற்றுத் தரத்தை குறிப்பிடும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

இதனால் இந்தப் போட்டியை தள்ளிவைக்குமாறும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சில சமூக செயற்பாட்டாளர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோரும் வலியுறுத்தினர். அது மட்டுமல்லாது இப்போட்டிக்காக டெல்லி சென்ற கிரிக்கெட் வீரர்களும்கூட அருண் ஜேட்லி மைதானத்தில் பயிற்சியின்போது முகமூடி அணிந்திருந்தனர்.

போட்டி நடைபெற்ற தினமான நேற்றும் அங்கு காற்று மாசு அதிகரித்ததோடு நகர் முழுவதிலும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் இறுதிவரை ரசிகர்களுக்கு இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இதனிடையே பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கடுமையான சூழல்களுக்கிடையே பங்கேற்ற இருநாட்டு வீரர்களுக்கும் நன்றி' என பதிவிட்டிருந்தார். மேலும் வெற்றிபெற்ற வங்கதேச அணிக்கு வாழ்த்தையும் அவர் தெரிவித்திருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகிக்க அடுத்த போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் ஏழாம் தேதி நடைபெறுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.