ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் போன்று மகளிர் ஐபிஎல் போட்டிகளும் நடத்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துவந்தன. இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார். அதில், மகளிர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கவேண்டும் என்கிற கோரிக்கை பல வருடங்களாக உள்ளது. கடந்த வருடம் பல நாட்டு வீராங்கனைகள் பங்கேற்ற டி20 ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் உள்ள அடிப்படை சிக்கலைப் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய கிரிக்கெட் வீராங்கனைகள் இதற்கு தேவைப்படுகிறார்கள். அடுத்த நான்கு வருடங்களில், சிறந்த வீராங்கனைகள் கொண்ட ஏழு ஐபிஎல் அணிகள் சாத்தியமாகலாம்.
உள்ளூர் கிரிக்கெட் சங்கங்கள், பலமான அணிகளை உருவாக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிசிசிஐயும் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அடுத்த மூன்று வருடங்கள் கழித்து, 150 முதல் 160 வீராங்கனைகள் கைவசம் இருக்கும்போது மகளிர் ஐபிஎல் போட்டியை ஆரம்பிக்கலாம். இப்போது நம்மிடம் 50இல் இருந்து 60 வீராங்கனைகள் மட்டுமே உள்ளனர். பிசிசிஐயின் நடவடிக்கை மூலம் இந்த எண்ணிக்கை உயரும்” என்றார்.
இதையும் படிங்க: ரிஷப் பந்த், தோனியாக மாற 15 வருடம் ஆகும் - கங்குலி