இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜன.27) நடைபெற்ற நான்காவது காலிறுதிச்சுற்றில் பிஹார் அணி - ராஜஸ்தான் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பரத் சர்மா - லம்பா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடித்தளமிட்டது. பின்னர் இருவரும் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லமோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தி அரைசதம் கடந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லமோர் 78 ரன்களை எடுத்தார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பிஹார் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஷஷீம் ரத்தோர் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய எஸ்.கனி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தது மட்டுமில்லாமல், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
-
Victory for Rajasthan! 👌👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rajasthan beat Bihar by 16 runs in #QF4 and seal a place in the #SyedMushtaqAliT20 semifinals. 👏👏#BIHvRAJ
Scorecard 👉 https://t.co/r6ERvO7oH7 pic.twitter.com/69TTfA5vc6
">Victory for Rajasthan! 👌👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2021
Rajasthan beat Bihar by 16 runs in #QF4 and seal a place in the #SyedMushtaqAliT20 semifinals. 👏👏#BIHvRAJ
Scorecard 👉 https://t.co/r6ERvO7oH7 pic.twitter.com/69TTfA5vc6Victory for Rajasthan! 👌👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2021
Rajasthan beat Bihar by 16 runs in #QF4 and seal a place in the #SyedMushtaqAliT20 semifinals. 👏👏#BIHvRAJ
Scorecard 👉 https://t.co/r6ERvO7oH7 pic.twitter.com/69TTfA5vc6
பின்னர் 68 ரன்களில் கனி ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் பிஹார் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
முன்னதாக, நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று போட்டியில் பரோடா அணி - ஹரியானா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
-
What a thriller! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Baroda held their nerve to seal a last-ball win over Haryana and with it, sealed a place in the #SyedMushtaqAliT20 semifinals. 👌👌 #HARvBDA #QF3
Scorecard 👉 https://t.co/NXEMYvhda0 pic.twitter.com/6y7WUX2CTS
">What a thriller! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2021
Baroda held their nerve to seal a last-ball win over Haryana and with it, sealed a place in the #SyedMushtaqAliT20 semifinals. 👌👌 #HARvBDA #QF3
Scorecard 👉 https://t.co/NXEMYvhda0 pic.twitter.com/6y7WUX2CTSWhat a thriller! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2021
Baroda held their nerve to seal a last-ball win over Haryana and with it, sealed a place in the #SyedMushtaqAliT20 semifinals. 👌👌 #HARvBDA #QF3
Scorecard 👉 https://t.co/NXEMYvhda0 pic.twitter.com/6y7WUX2CTS
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பரோடா அணிக்கு, கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல் உருவாகியது. ஆட்டத்தின் கடைசி பந்தை எதிர்கொண்ட விஷ்ணு சோலன்கி சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் பரோடா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியானா அணியை வீழ்த்திய அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2021: பிப்.18ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் ஏலம்!