நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனிடயே நாளை மூன்றாவது போட்டி நடக்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியில் பல வீரர்கள் காய்ச்சல் மற்றும் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த அணியின் சாண்ட்னர், சவுதி ஆகியோர் காஷ்ட்ரோ பிரச்னையாலும், கூகலின் வைரல் காய்ச்சல் காரணமாகவும் மூன்றாவது போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் இவர்களுக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி மற்றும் ப்ளெயர் டிக்னர் நியூசிலாந்து அணியில் இணைந்துள்ளனர்.
ஏற்கனவே நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்காத நிலையில், முக்கிய வீரர்களான டிம் சவுதி, சாண்ட்னர் ஆகியோர் போட்டியில் பங்கேற்க முடியாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உலக சாம்பியனிடம் போராடி வீழ்ந்த இந்தியா!