2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் மீது பந்தை சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
இவ்வழக்கின் விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட்டிற்கு ஓராண்டு தடையும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு விளையாடுவதற்கும், இரண்டு ஆண்டுகள் கேப்டன்ஷிப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்தாண்டு மூவர் மீதான தடையும் விலகி சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பினர். இருப்பினும் ஸ்மித் அணியின் ஒரு வீரராக மட்டுமே களமிறங்கினர். இந்நிலையில் ஸ்மித்தின் கேப்டஷிப் மீதான இரண்டு ஆண்டுகாலத் தடை இன்றோடு முடிவடைந்துள்ளது.
இதன் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்மித்தை நியமிப்பதில் எந்தவொரு தடையும் இல்லை என்பதால், இனிவரும் போட்டிகளில் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிபார்க்கின்றனர்.
-
Smith's leadership ban ends amid cricket limbo: https://t.co/2m3JvUUGuy pic.twitter.com/ZQ4zWdwsV3
— cricket.com.au (@cricketcomau) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Smith's leadership ban ends amid cricket limbo: https://t.co/2m3JvUUGuy pic.twitter.com/ZQ4zWdwsV3
— cricket.com.au (@cricketcomau) March 29, 2020Smith's leadership ban ends amid cricket limbo: https://t.co/2m3JvUUGuy pic.twitter.com/ZQ4zWdwsV3
— cricket.com.au (@cricketcomau) March 29, 2020
ஆனால் தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசால், அனைத்துவிதமான சர்வதேச, உள்ளூர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இச்சயமயத்தில் ஸ்மித்தின் தடைக்காலம் முடிவடைந்துள்ளதால், இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:'டெஸ்ட்டில் கேப்டனான முதல் போட்டியை மறக்கவே முடியாது' - பாண்டிங்