ETV Bharat / sports

இன்னிங்ஸ் வெற்றி கண்ட ஆறு போட்டிகள் - டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறை! - Santner

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து ஆறு போட்டிகள் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி முடிந்துள்ளன.

six-continue-innings-victory-by-three-nations

author img

By

Published : Nov 26, 2019, 1:11 PM IST

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெ ஓவல் மைதானத்திலும், அதே சமயம் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் என ஒரே நாளில் (நவம்பர் 21) இரண்டுப் போட்டிகள் தொடங்கின. இதையடுத்து, நவம்பர் 22ஆம் தேதி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது.

இந்த மூன்று போட்டிகளின் முடிவும் நவம்பர் 24இல் எட்டப்பட்டன. முதலில், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேபோல, இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்றன.

இந்திய அணி வங்கதேச அணியிடம் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற ஒரே அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது.

இதில், ஆச்சரியம் என்னவென்றால் கடைசியாக நடைபெற்ற ஆறு டெஸ்ட் போட்டிகளின் முடிவும், இன்னிங்ஸ் வெற்றியை எட்டின. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து ஆறு போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றி எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகள் விவரம்:

  • இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • இந்தியா vs வங்கதேசம் - இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • இந்தியா vs வங்கதேசம் - இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • நியூசிலாந்து vs இங்கிலாந்து - நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Intro:Body:

india test innings

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.