ETV Bharat / sports

ஒருநாள் போட்டிகளில் பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - அக்தர்! - சோயப் அக்தர்

ஒருநாள் போட்டிகளில் விதிக்கப்பட்டுள்ள பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Shoaib Akhtar slams ICC, says it has 'successfully finished cricket' in the last 10 years

author img

By

Published : May 27, 2020, 1:32 PM IST

2012ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் பவுன்சர் பந்துகளுக்கு ஐசிசி விதிமுறையை கொண்டுவந்தது. அதன்படி, பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர் பந்துகளை மட்டும்தான் வீச வேண்டும். அந்தப் பந்து பேட்ஸ்மேன்களின் தலைக்கு மேல் சென்றால் அது ஒயிடாக அறிவிக்கப்படும். அதேசமயம், பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் இரண்டாவது முறை பவுன்சர் பந்து வீசும்போது அவருக்கு நடுவர் எச்சரிக்கை வழங்குவார்.

அதை மீறி பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் மூன்றாவது முறையாக பவுன்சர் பந்துகளை வீசினால் அவருக்கு அந்த போட்டியில் பந்துவீச தடைவிதிக்கப்படும். அவருக்கு பதிலாக அணியில் உள்ள வேறொரு நபர் அந்த ஓவரை வீச வேண்டும் என தெரிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இதேபோல், டி20 போட்டிகளில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்துதான் வீச வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் விதிக்கப்பட்டுள்ள பவுன்சர் பந்துகளுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஎஸ்பியன் கிரிக்இன்ஃபோவுடன் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கொண்டுவந்த இந்த விதிமுறையால் கிரிக்கெட் போட்டியை நாசமடைந்துவிட்டது. சமீப ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ்களில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்திவருவதால், பவுன்சர் பந்துகள் வீச பந்துவீச்சாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை நீக்க வேண்டும்.

அப்படி ஐசிசி சில தளர்வுகளை கொண்டுவந்தால் மட்டுமே பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் ஒரு சவலான போட்டி நிலவும். முன்னதாக, பவுன்சர் பந்துகளில் சச்சினுக்கும் எனக்கும் நடுவே எப்போதும் சவால் இருக்கும். அதுபோன்ற சவால்கள் தற்போது இல்லாததே கிரிக்கெட் போட்டிகள் சுவாரஸ்யமற்றதாக மாறியதற்கு காரணம். அதுபோன்ற சவால்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றால் பந்துவீச்சாளர்களுக்கு ஐசிசி சில தளர்வுகளை கொண்டுவர வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அக்ரம், வாக்கர், வார்னே ஆகியோரை எதிர்த்து விராட் ஆடியிருந்தால்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.