ETV Bharat / sports

டார்சனாக மாறிய ஷிகர் தவான்!

author img

By

Published : Aug 13, 2019, 8:26 PM IST

போர்ட் ஆஃப் ஸ்பெயினில்  இந்திய வீரர் ஷிகர் தவான் டார்சன் போன்று சாகசம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

டார்சனாக மாறிய ஷிகர் தவான்!

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஏற்கனவே, டி20 தொடரை வென்ற இந்திய அணி, தற்போது மூன்றுஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி நாளை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய வீரர்களான ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கலீல் அஹமது ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான நிகோலஸ் பூரான், பொல்லார்ட் உடன் நீர்வீழ்ச்சியில் தங்களது நேரத்தை மகிழ்ச்சிகரமாக செலவழித்துவருகின்றனர்.

இதில்,ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மரத்தின் விழுதுகளை பிடித்து தண்ணீரில் வீழுந்து ஆட்டம் போடும் வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். டார்சன் போன்று இவர்கள் செய்யும் சாகச வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி நாளை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.