சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் சஷாங்க் மனோகர் கடந்த 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, 2018இல் இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியின்றி ஐசிசி தலைவராக பொறுப்பு வகித்தார்.
தொடர்ந்து இரு முறை ஐசிசி தலைவராக இருந்த அவரது பதவி காலம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்திருந்தாலும் இரண்டு மாதங்களுக்கு பதவியில் நீடித்தார்.
ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கு கங்குலி (பிசிசிஐ தலைவர்), கோலின் கிரேவ் (இங்கிலாந்து), டேவ் கேமரான் ( வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆனால், சஷாங்க் மனோகர் அவ்வாறு செய்யாமல் முறைப்படி ஐசிசி தலைவர் பதவியிலிருந்து நேற்று விலகினார். இதனால் ஐசிசி துணைத் தலைவராக இருக்கும் இம்ரான் கவாஜா தற்காலிக ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சஷாங்க் மனோகர் 2008 முதல் 2011 வரை பிசிசிஐ தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது