இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், கம்மின்ஸ் வீசிய பந்தில் மணிக்கட்டு பகுதியில் காயமடைந்தார்.
ஷமி விலகல்
இதையடுத்து ஸ்கேன் பரிசோதனைக்கு ஷமி உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்தியா - இங்கிலாந்து
இதனிடையே இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் அடுத்த ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நடப்பதாக பிசிசிஐ அறிவித்தது.
மூன்று ஒருநாள், மூன்று டெஸ்ட், ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் இவ்விரு அணிகளும் விளையாட திட்டமிட்டுள்ளன. மேலும் இத்தொடருக்கான மைதானங்கள் மற்றும் தேதிகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
சந்தேகத்தில் ஷமி
இந்நிலையில் காயத்தால் அவதிப்பட்டு வரும் முகமது ஷமி, ஆறுவாரங்களுக்கு கட்டாய ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது ஓய்வு முடிந்த பிறகு உடற்தகுதி தேர்விற்கும் உட்படுத்தப்படவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனால் பிப்ரவை 05ஆம் தேதி தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:காதலியை கரம் பிடித்த சஹால்!