இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி, இன்ஸ்டாகிராம் வாயிலாக வெளிநாட்டில் உள்ள 'சோபியா' என்ற பெண்ணுக்கு 'good afternoon' என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் ஷமி அனுப்பிய அந்த செய்தியை ஸ்க்ரீன்சாட் எடுத்து ட்விட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "1.4 மில்லியன் ரசிகர்களால் பின்தொடரப்படும் ஒரு கிரிக்கெட் வீரர் ஏன் எனக்கு மெசேஜ் செய்ய வேண்டும்." , என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.
இதற்கு சில ரசிகர்கள் ஷமிக்கு ஆதரவளித்து அந்த பெண்ணை இணையத்தில் வறுத்தெடுத்துக் வருகின்றனர். இன்னும் சிலர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இதனால் தான் ஷமியை ஆட வைக்கவில்லை என்று கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர். ஆனால், இது தொடர்பாக தற்போது வரையில் ஷமி தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.
ஏற்கனவே அவர் மனைவி தந்த புகாரின் பேரில் முகமது ஷமி மீது FIR வழக்குப் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.