ETV Bharat / sports

வெ.இண்டீஸுக்கு எதிரான தொடரில் விளையாடும் ஷகிப் அல் ஹசன்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைவிதிக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இடம்பிடித்துள்ளார்.

Shakib included in Bangladesh's preliminary squad for WI series

author img

By

Published : Jan 4, 2021, 9:15 PM IST

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இத்தொடருக்கான 24 பேர் கொண்ட வங்கதேச அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் கேப்டனாக தமிம் இக்பாலும், டெஸ்ட் அணியின் கேப்டனாக மோமிமுல் ஹக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சூதாட்டத் தரகர்கள் அணுகியதைச் சரியாக ஐசிசியிடம் தெரிவிக்காத வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு ஒரு வருடம் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணி: தமிம் இக்பால் (கே),மோமிமுல் ஹக், தஸ்கின் அகமது, கலீத் அகமது, ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்மூத், நஜ்முல் ஹொசைன் சாண்தோ, முஸ்தாபிஸூர் ரஹ்மான், முஷ்ஃபிகூர் ரஹீம், மெஹதி ஹசன், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், நுரல் ஹசன், யாஷிர் அலி, ஷாத்மான் இஸ்லாம், சைஃப் ஹசன், நயீம் ஹசன், அபு ஜெயத், எபாடோட் ஹொசைன்.

டெஸ்ட் அணி: மோமிமுல் ஹக், தஸ்கின் அகமது, தமிம் இக்பால், கலீத் அகமது, ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்மூத், நஜ்முல் ஹொசைன் சாந்தோ, முஸ்தாபிஸூர் ரஹ்மான், முஷ்ஃபிகூர் ரஹீம், மெஹதி ஹசன், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், இஸ்லாம் ஹலிமான் , சைஃப் ஹசன், நயீம் ஹசன், அபு ஜெயத், எபாடோட் ஹொசைன்.

இதையும் படிங்க:‘நான் இந்திய அணியில் விளையாடுவது தேர்வாளர்களின் கையில்’ - சர்ஃப்ராஸ் கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.