2020ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர் இன்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் உலகக்கோப்பையை நடத்தும் அணியான தென் ஆப்பிரிக்க அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் பிரைஸ் பார்சன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, அதையடுத்து கேப்டன் பார்சன்ஸ் - லூக் ஆகியோர் சிறிது நேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த இணை 55 ரன்களை சேர்த்தது.
![சஃபிக்குல்லா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5743511_afghanistn.jpg)
பின் பார்ன்சன்ஸ் 40 ரன்களிலும், லூக் 25 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து சஃபிக்குல்லா பந்தில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஜெரால்டு கொயட்ஸ் அதிரடியாக ஆட, தென் ஆப்பிரிக்க அணி 29.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் சஃபிக்குல்லா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியிலேயே பந்துவீச்சாளர் ஒருவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது, உலகக்கோப்பைத் தொடர் மீது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒதுக்கப்படும் சஞ்சு சாம்சன்: பந்திற்கு பதிலாகப் பரத் தேர்வு!