ETV Bharat / sports

நாட்டிற்காக சதம் விளாசியது சிறப்பாக இருந்தது - ஸ்ரேயாஸ் ஐயர் - இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டி

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய தருணம் மிகவும் சிறப்பானது என ஸ்ரேயாஸ் ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Scoring century for my nation was special: Shreyas Iyer

author img

By

Published : Feb 6, 2020, 6:39 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டனில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும், இப்போட்டியில் நான்காவது வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது பொறுப்பான ஆட்டத்தால் சதம் விளாசியது இந்திய அணிக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ஆறுதலாக இருந்தது. 107 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதமும் கூட. பலருக்கும் முதல் சதம் ஸ்பெஷலாக இருக்கும் அதுபோல ஸ்ரேயாஸ் ஐயருக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் இந்த சதம் ஸ்பெஷலாகதான் அமைந்தது. ஏனெனில், நீண்ட நாட்களாக இந்திய அணிக்கு இருந்த நான்காவது வரிசை பிரச்னைக்கு தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மூலம் தீர்வு கிடைத்துவிட்டதாக நம்பப்படுகிறது.

Shreyas Iyer
ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த நிலையில், இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். அதில், "நாங்கள் எதிர்பார்த்த படி போட்டியின் முடிவு அமையவில்லை. ஆனால் நாட்டிற்காக நான் முதல் சதம் விளாசியது எனக்கு சிறப்பான தருணம். நான் முதலில் பேட்டிங் விளையாட தொடங்கியதிலிருந்து இதுதான் எனது கனவாக இருந்தது. இதற்காக எனக்கு வாய்ப்பளித்த இந்திய அணி நிர்வாக்கத்திற்கும், என் மீது தொடர்ந்து அவர்கள் நம்பிக்கை வைத்ததற்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

  • Not the way we wanted the match to go, but scoring a century for my country was a special moment. One that I've been dreaming about since I first held a bat. Thank you to the management for the opportunity and their continued faith in me. Onwards and upwards now 🇮🇳 #TeamIndia pic.twitter.com/8tAiK8n6B4

    — Shreyas Iyer (@ShreyasIyer15) February 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

25 வயதான ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை இந்திய அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், அறு அரைசதம் உட்பட 634 ரன்களை எடுத்துள்ளார். முதல் போட்டியில் சதம் விளாசியதால், வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் கோலி தான் டாப்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.