ETV Bharat / sports

சீட் எட்ஜ் த்ரில்லராக சென்ற ஆட்டம்.. 1 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா - கேப்டன் மோர்கன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

saveng-south-africa-defeat-england-by-1-run

author img

By

Published : Feb 13, 2020, 9:19 AM IST

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் - பவுமா இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தபோது டி காக் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இணைந்த வாண்டர் டூசன் - பவுமா இணை இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைச் சிதறடித்தது. இந்த இணையின் அதிரடியான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது.

இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்திருந்தபோது வாண்டர் டூசன் 31 ரன்களிலும் பவுமா 43 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் உயர்வது சிறிது நேரம் தடுக்கப்பட்டது. பின்னர் வந்த மில்லர் 16 ரன்களிலும் ஸ்மட்ஸ் 20 ரன்களிலும் பெலுக்வாயோ 18 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - பட்லர் இணை தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இதில் பட்லர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த பெயர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து ஜேசன் ராய் அதிரடியில் அசத்தினார். இதனால் 8 ஓவர்களில் இங்கிலாந்து அணி 87 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 22 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.

கேப்டன் மோர்கன்
அரைசதம் அடித்த கேப்டன் மோர்கன்

இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்திருந்தபோது பெயர்ஸ்டோ 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் மோர்கன் - ராய் இணை தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது. 14 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்திருந்ததால் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜேசன் ராய் 70 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த டென்லி 3 ரன்கள், ஸ்டோக்ஸ் 4 ரன்கள் என சீட்டுக்கட்டாய் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரிந்தனர். இதனால் மோர்கன் மீதான அழுத்தம் அதிகரித்தது. 19ஆவது ஓவரின் இறுதியில் மோர்கனும் 52 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் டாம் கரண் 2 ரன்கள் எடுக்க, அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் மொயின் அலி ரன் ஏதும் எடுக்கவில்லை. பின்னர் வீசப்பட்ட நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஐந்தாவது பந்தில் மொயின் அலி ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்து அடில் ரஷீத் ரன் அவுட்டானார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிடி தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: மிரட்டல் ஃபார்மில் இருக்கும் சர்ஃப்ராஸ் கான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.