கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் உமிழ்நீர் பயன்படுத்த ஐசிசி தடை விதித்துள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சாதகமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், ''ஐசிசியின் உமிழ்நீர் தடை குறுகியக் கால போட்டிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பெரும் மாற்றத்தை விளைவிக்கும். இந்தத் தடையால் பந்துவீச்சாளர்களுக்கு சவால் ஏற்பட்டுள்ளது.
பந்தில் ஸ்விங் சிறிதேனும் இருந்தால் தான் பந்துவீசுவதற்கு நன்றாக இருக்கும். அதற்கு உமிழ்நீர் பயன்படுத்தியே ஆட வேண்டும்.
கரோனா சூழல் கட்டுக்குள் வந்த பின்னர் ஐபிஎல் போட்டிகள் நடப்பது நல்ல விஷயம். அப்போது தான் ரசிகர்கள் மீண்டும் கிரிக்கெட்டோடு ஒன்றிணைய முடியும்'' என்றார்.