இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் தற்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்திய அணியில் இடம்பெறாமல் தனது உடல் நலனில் கவனம் செலுத்திவருகிறார்.
இவர் கடந்த சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், தோனி, அவரின் மகள் ஸிவா, ஆகியோருடன் இணைந்து எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு அதில், 'உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன்' எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
Miss this little one (and the big guy too) ❤ pic.twitter.com/Fsl8s0m68L
— hardik pandya (@hardikpandya7) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Miss this little one (and the big guy too) ❤ pic.twitter.com/Fsl8s0m68L
— hardik pandya (@hardikpandya7) November 2, 2019Miss this little one (and the big guy too) ❤ pic.twitter.com/Fsl8s0m68L
— hardik pandya (@hardikpandya7) November 2, 2019
ஹர்திக்கின் இந்தப் பதிவிற்கு தோனியின் மனைவி சாக்ஷி, 'அட ஹர்த்திக் பாண்டியா, ராஞ்சியில் உங்களுக்கும் ஒரு வீடு இருக்குனு உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?' என பதிலளித்துள்ளார். தற்போது சாக்ஷியின் இந்தப் பதிவானது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: முதலாவது டி20: டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு!