ETV Bharat / sports

பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் சச்சின் - ஆஸ்திரேலியா காட்டுத்தீ

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரண உதவிக்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் ஆடும் அணிகளுக்கு இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகச் செயல்படவுள்ளார்.

Sachin, Walsh to don coaching hats for Bushfire Cricket

author img

By

Published : Jan 21, 2020, 12:48 PM IST

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக நிவாரண உதவிகள் திரட்டும் பணிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ’புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ என்னும் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளனர். அதில் வசூல் செய்யப்படும் நிதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி வார்னே, பாண்டிங் ஆகியோரின் தலைமையில் ஆடப்படவுள்ளது. பிக் பாஷ் தொடரின் இறுதிபோட்டியன்று இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், ஜஸ்டின் லாங்கர், பிரெட் லீ, வாட்சன், பிளாக்வெல், கிளார்க், ஸ்டீவ் வாக், மெல் ஜோன்ஸ் ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

தற்போது இந்த இரு அணிகளுக்கும் பயிற்சியளிக்க சச்சின் டெண்டுல்கர், வால்ஷ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக இயக்குநர் கெவின் ராபர்ட்ஸ் பேசுகையில், ''சச்சின், வால்ஷ் ஆகியோரை வரவேற்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் பெருமை கொள்கிறது. இவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்'' என்றார்.

இதையும் படிங்க: காட்டுத்தீக்காக ரிக்கி பாண்டிங்கை எதிர்க்கும் வார்னே!

Intro:Body:

Sachin, Walsh to don coaching hats for Bushfire Cricket

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.