ETV Bharat / sports

சச்சின் மாதிரி எனக்கு டார்ச்சர் கொடுத்த பவுலரே இல்லை - இன்சமாம்-உல்-ஹக்! - சச்சின்

சச்சினின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

sachin-gave-me-lot-of-troubles-and-got-me-out-many-times-says-inzamam

author img

By

Published : Feb 25, 2020, 8:19 PM IST

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் காலக்கட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன்களாக விளங்கியவர்கள் பட்டியலில் லாரா, பாண்டிங், டிராவிட், ஜெயசூர்யா வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம்-உல்-ஹக்கிம் முக்கியமான வீரராக திகழ்ந்தார். சச்சின் குறித்தும், அவரது சாதனைகள், பந்துவீச்சு ஆகியவற்றை குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

சச்சின் - இன்சமாம்
சச்சின் - இன்சமாம்

சச்சின் குறித்து இன்சமாம்:

"கிரிக்கெட்டுக்காக பிறந்தவர் சச்சின். 16-17 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் என சொல்வது எளிது. ஆனால், வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்த்து, அவர் எப்படிதான் பேட்டிங்செய்தார் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவே இருக்கிறது. இது சச்சின் போன்ற ஒரு சில அசாதாரண பேட்ஸ்மேன்களால் மட்டுமே சாத்தியமாகும். அசாதாரண விஷயத்திற்கு மேல் ஒன்று இருந்தால் அது சச்சின்தான்".

சச்சினின் சாதனைகளை குறித்து இன்சமாம்:

"சச்சினிடம் இருக்கும் இரண்டாவது குவாலிட்டியாக நான் பார்ப்பது அவரது சாதனைகளைத்தான். தற்போதைய சூழல் போல அவரதுக் காலக்கட்டத்தில் ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்த பலரும் குறிப்பிட்ட ஒரு ஃபார்மெட்டில் 8 முதல் 8,500 ரன்கள் வரைதான் அடித்திருந்தனர்.

சுனில் கவாஸ்கர் மட்டுமே டெஸ்ட் போட்டியில், 10,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இது யாராலும் முறியடிக்க முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சச்சின் அதை முறியடித்தது மட்டுமில்லாமல் பல்வேறு சாதனைகளையும் முறியடித்தார்.

தற்போது அவரது சாதனையை யார் முறியடிப்பார் என்பதில் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்".

sachin-gave-me-lot-of-troubles-and-got-me-out-many-times-says-inzamam
சச்சின் - இன்சமாம்

பதற்றத்திலும் ரன்கள் அடித்த நாயகன் சச்சின்:

"சச்சினிடம் சிறந்த மனநிலை இருந்தது. அவரை மனரீதியாக அவுட் செய்து மிகவும் கடினம். அவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருப்பதால் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ரன் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். சச்சினுக்கென இருந்ததை போல வேறு யாருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருந்ததில்லை. இந்த பிரஷரையும் சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தவர் அவர்".

சச்சினை போல என்னை டார்ச்சர் செய்த பவுலர் யாருமில்லை:

"சச்சினால், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பினும் வீச முடியும். மிதமான வேகத்திலும் பந்தை வீச முடியும். பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும், அவர் ஜீனியஸ்தான். நான் எத்தனையோ சிறந்த லெக் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ளேன்.

அவர்களது கூக்ளி பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவதில்கூட, நான் சிரமம் பட்டதில்லை. ஆனால், சச்சினின் லெக் ஸ்பின்னை எதிர்கொள்வதில்தான் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பலமுறை அவரது பந்துவீச்சில் நான் ஆட்டமிழந்துள்ளேன்".

சச்சினே சிறந்த வீரர்... அவர் ஓய்வு பெற்றிருக்கக்கூடாது:

"கிரிக்கெட்டில் சச்சினை போன்ற ஒரு சிறந்த வீரர் இதுவரை இருந்ததே இல்லை. எதிர்காலங்களில் வேண்டுமானாலும் சச்சினை போல் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்கள் வரலாம். என்னை பொறுத்தவரையில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். அவரது பேட்டிங்கை பார்த்தால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அவர் கிரிக்கெட்டை விட்டே சென்றிருக்கக்கூடாது" இவ்வாறு அவர் கூறினார்.

1989 முதல் 2013 வரை சச்சின் 200 டெஸ்ட், 463 ஒருநாள் போட்டிகள் உட்பட 33,457 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிராட்மேனின் முடிவும்; சச்சினின் தொடக்கமும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.