இந்திய அணியின் முன்னாள் மனநிலை, செயல்திட்ட பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் பேடி உப்டான் விளங்கியுள்ளார். இவர், 2008இல் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றபோது ஓய்வறையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை த்ரோபேக் வீடியோவாக பேடி உப்டான் ட்விட்டரில் வெளியிட்டார்.
அதில், அப்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனி ஓய்வறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்துக் கொண்டிருந்தார். அதேசமயம், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட விவிஎஸ் லக்ஷ்மனுக்கு, சச்சின் தொடர்ந்து இரண்டு பந்துகளை பவுன்சராக வீசினார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
இப்போட்டியில், லக்ஷ்மண் பயிற்சி எடுத்தும் அவரது பேட்டிங் பெரிதாக சோபிக்கவில்லை. ஏனெனில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 24 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இருப்பினும் சச்சின் சதத்தால் இப்போட்டியில் இந்திய அணி 387 ரன்களை சேஸிங் செய்து வெற்றிபெற்றது.