ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி 20, மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (அக்.26) அறிவித்தது. இதில், காயம் காரணமாக கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டது.
மேலும் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான துணைக்கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா பயிற்சி எடுக்கும் காணொலியை வெளியிட்டது. இதனால் ரோஹித் சர்மா வேண்டுமென்றே அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன.
இதற்கிடையில் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பயோவில் பதிவு செய்திருந்த ‘இந்தியன் கிரிக்கெட்டர்’ என்பதனை நீக்கி, தனது மனைவியின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பிபிஎல் தொடரிலிருந்து ஏபிடி விலகல்!