ETV Bharat / sports

கோவிட்-19: ரூ.80 லட்சம் நிதியுதவி அளித்த ஹிட்மேன்! - கோவிட்-19 முக்கிய செய்திகள்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா ரூ. 80 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Rohit Sharma pledges to donate Rs 80 lakh to combat COVID-19

author img

By

Published : Mar 31, 2020, 11:42 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் இதுவரை 1200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 32 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு, விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

அந்தவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூ.80 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ”நம்முடைய நாட்டை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும். அந்தப் பொறுப்பு தற்போது நம் மீது உள்ளது. இதனால் ரூ.45 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கும், ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கும்(மகாராஷ்டிரா), மேலும் ஏழைகளுக்கு உணவு வழங்கவும், தெரு நாய்களின் நலனுக்காகவும் தலா ஐந்து லட்சம் வழங்குகிறேன். நமது தலைவர்களுடன் நாமும் இணைந்து அவர்களை ஆதரிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.76 லட்சம் திரட்டிய சாய்
!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.