இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் நாளில் 58 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தபோது, போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரோஹித் ஷர்மா 117 ரன்களுடனும் அஜிங்கியா ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் காலை முதலே இருவரும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
-
💥 200 FOR ROHIT SHARMA 💥
— ICC (@ICC) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He's recorded three double centuries in ODI cricket, and now he has one in Tests too 👀
What a knock this has been from the India opener!
Follow #INDvSA LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/6lz80LHK4C
">💥 200 FOR ROHIT SHARMA 💥
— ICC (@ICC) October 20, 2019
He's recorded three double centuries in ODI cricket, and now he has one in Tests too 👀
What a knock this has been from the India opener!
Follow #INDvSA LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/6lz80LHK4C💥 200 FOR ROHIT SHARMA 💥
— ICC (@ICC) October 20, 2019
He's recorded three double centuries in ODI cricket, and now he has one in Tests too 👀
What a knock this has been from the India opener!
Follow #INDvSA LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/6lz80LHK4C
இந்திய அணியின் ரோஹித் சர்மா 249 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் என 200 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். அதன் பின் 212 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபடா பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க:
'டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே எனது முன்னுரிமை' - பாக். டெஸ்ட் கேப்டன் அசார் அலி!