ETV Bharat / sports

ரோஹித் ஷர்மாதான் எனது ஹீரோ... பாகிஸ்தான் இளம் வீரர்!

லாகூர்: ரோஹித் ஷர்மாதான் எனது ரோல் மாடல், அவரைப்போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இளம் சென்சேஷன் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.

rohit-sharma-finds-new-fan-in-haider-ali-paks-rising-talent

author img

By

Published : Mar 31, 2020, 12:40 PM IST

மாடர்ன் டே கிரிக்கெட் உலகில் ரோஹித் சர்மாதான் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டர் என வாசிம் ஜாஃபர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். உலகக்கோப்பைத் தோல்விக்கு பின், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான காரணம் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அவரின் செயல்பாடுகள்தான்.

கேப்டன் என்பவர் ரன்கள் குவிப்பதோடு, அணியை வழிநடத்துவதிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதனை ரோஹித் ஷர்மா சிறப்பாக செய்கிறார். இதனாலேயே ரோஹித் ஷர்மாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கெட்டர்கள் மத்தியில் ரோஹித் ஷர்மா ரோல் மாடல் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். இதனைக் கூறியது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இளம் சென்சேஷன் ஹைதர் அலி.

19 வயதே ஆகும் இவர், சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஒன்பது போட்டிகளில் களமிறங்கி 239 ரன்களக் குவித்து பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் ரோஹித் ஷர்மாதான். அவருடைய சிறப்பு என்னவென்றால் அவரின் ஸ்ட்ரைக் ரேட்தான். அந்த ஸ்ட்ரைக் ரேட்டில் நானும் ரன்கள் சேர்க்க வேண்டும்'' எனப் பேசியுள்ளார்.

ஹைதர் அலி
ஹைதர் அலி

ஹைதர் அலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராசா பேசுகையில், ''ஹைதர் அலி மிகவும் திறமையான வீரர். அவரது பேட்டிங் தனித்துவமாக உள்ளது. பவர் ஹிட்டங் ஷாட்களை எளிதாக ஆடுகிறார்.

அதனால் அவர் விராட் கோலி, பாபர் அஸாம் போன்றோர் போல் பேட்டிங்கில் எவ்வித மாற்றமும் செய்யாமல், கன்சிஸ்டன்சியோடு ஆட முயற்சிக்க வேண்டும்'' எனப் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பாண்டிங்குடன் நடந்த 'மேஜிக்'... நினைவுகூர்ந்த ரோஹித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.