ETV Bharat / sports

ஸ்மித், வார்னரை கொண்ட ஆஸ்திரேலிய தொடர் சிறப்பானதாக இருக்கும் - ரோகித் சர்மா! - நியூசிலாந்து அணி

இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்பதால் அது சிறப்பு மிக்க ஆட்டமாக அமையும் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Rohit Sharma feels Australia series this time will be different ball game with Smith and Warner around

author img

By

Published : Apr 22, 2020, 7:24 PM IST

Updated : Apr 22, 2020, 7:32 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் ஸ்மித், வார்னர் இடம்பெறுவதினால், இத்தொடர் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரோகித், ‘இந்தாண்டு தொடக்கத்தில் நான் நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்ய காத்திருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. அதனால், ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இத்தொடரில் ஸ்மித், வார்னர் இருவரும் அணியில் இருப்பார்கள் என்பதால், இது சவால் நிறைந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் நான் தொடக்க வீரராக களமிறங்குவது குறித்து ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளேன். எனக்கு இவ்வாய்ப்பு கிடைக்கும் வரை நான் என்னை மெருகேற்றி வந்தேன். எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நான் என்னை நிருபித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டுத் தொடர்கள் முற்றிலுமாக ஒத்திவைக்கப்பட்டுவரும் நிலையில், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:எனது வாழ்வில் அமைதியையும், பொறுமையையும் இவரிடம் தான் கற்றுக்கொண்டேன் - விராட் கோலி!

Last Updated : Apr 22, 2020, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.