கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வீரர்கள் தங்களது நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளங்களில் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வரும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரபல ஹிந்தி பாடல்களை ஒன்றிணைந்த கோர்வையாக (மாஷப்) கிட்டாரை வாசித்தபடி, பாடியுள்ளார். இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
-
The Sunday Mashup ft. @JemiRodrigues 🎶🎶👏 https://t.co/bkv7ii8ntL
— BCCI (@BCCI) May 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Sunday Mashup ft. @JemiRodrigues 🎶🎶👏 https://t.co/bkv7ii8ntL
— BCCI (@BCCI) May 24, 2020The Sunday Mashup ft. @JemiRodrigues 🎶🎶👏 https://t.co/bkv7ii8ntL
— BCCI (@BCCI) May 24, 2020
பிசிசிஐ ட்விட்டர் பதிவில், ஜெமிமா ரோட்ரிக்ஸின் ஞாயிறு மாஷப் என பதிவிட்டு, ஜெமிமா கிட்டார் இசைத்து பாடுவது போன்ற காணொலியையும் இணைத்துள்ளது.
இதையும் படிங்க:‘அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் தான் காரணம்’ - கேரி கிர்ஸ்டன்!