உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்றுவருகின்றன. இதில், இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடுவதால் அவர்களது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்துக்கு வருகை தருகின்றனர். இதுவரை நான்கு போட்டிகள் முடிந்த நிலையில், நாளை மறுநாள் மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
-
Update 1: Due to the outbreak of COVID-19 and in the interest of the safety and security of fans, players and staff, the remaining matches of the Unacademy Road Safety World Series will be held behind closed doors at the DY Patil Stadium. @unacademy @Colors_Cineplex
— Road Safety World Series (@RSWorldSeries) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Update 1: Due to the outbreak of COVID-19 and in the interest of the safety and security of fans, players and staff, the remaining matches of the Unacademy Road Safety World Series will be held behind closed doors at the DY Patil Stadium. @unacademy @Colors_Cineplex
— Road Safety World Series (@RSWorldSeries) March 12, 2020Update 1: Due to the outbreak of COVID-19 and in the interest of the safety and security of fans, players and staff, the remaining matches of the Unacademy Road Safety World Series will be held behind closed doors at the DY Patil Stadium. @unacademy @Colors_Cineplex
— Road Safety World Series (@RSWorldSeries) March 12, 2020
இதனிடையே, உலக நாடுகளையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் 73பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், குறிப்பாக மகராஷ்டிரா மாநிலத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வைரஸின் தாக்கம் எளிதில் பரவக்கூடும் என்பதால், ரசிகர்கள் இல்லாமல் இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸை கிண்டல் செய்த கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு