சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆளுமையாக விளங்கியவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவரது தலைமையின் கீழ், ஆஸ்திரேலிய அணி 324 போட்டிகளில் 220இல் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, இரண்டு உலகக்கோப்பை ஒருநாள் தொடரை வென்று அசத்தியது.
கேப்டன்ஷிப் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் கைதேர்ந்தவர் பாண்டிங். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில், அதிக ரன்கள் குவித்த வீரர் உள்ளிட்ட பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக, 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டிங், 41 சதங்கள், 62 அரைசதங்கள் உட்பட 13,378 ரன்களை குவித்துள்ளார்.
-
Best over I ever faced. Class reverse swing at 90odd mph! https://t.co/EUdN9P64Cr
— Ricky Ponting AO (@RickyPonting) April 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Best over I ever faced. Class reverse swing at 90odd mph! https://t.co/EUdN9P64Cr
— Ricky Ponting AO (@RickyPonting) April 10, 2020Best over I ever faced. Class reverse swing at 90odd mph! https://t.co/EUdN9P64Cr
— Ricky Ponting AO (@RickyPonting) April 10, 2020
இந்நிலையில், தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் தான் சந்தித்த சிறந்த ஓவர் எது என்பது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், கடந்த 2005 ஆஷஸ் டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் வீசிய ஓவரை எதிர்கொண்டதுதான் நான் சந்தித்திலேயே ஆகச் சிறந்த ஓவர் என குறிப்பிட்டிருந்தார்.
அப்போட்டியில் ஃபிளின்டாஃப்பின் ஓவரை பாண்டிங் எதிர்கொண்ட வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதை நினைவுகூர்ந்த பாண்டிங், நான் சந்தித்ததிலேயே இதுதான் சிறந்த ஓவர். 90 மைல் வேகத்தில் அட்டகாசமாக பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என பதிவிட்டிருந்தார்.
பாண்டிங் கூறியதைப்போல, அந்த ஓவரில் ஃபிளின்டாஃபின் பந்துவீச்சில் இரண்டு முறை எல்.பி.டபள்யூ, ஒரு முறை ஸ்லிப் கேட்ச் என மூன்றுமுறை தப்பித்த பாண்டிங், கடைசிப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். 282 ரன்கள் இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 279 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக இப்போட்டி பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'நீ விதைத்த வினையெல்லாம்'... ஆஷஸ் மூலம் இங்கிலாந்துக்கு புது மொழி!