ETV Bharat / sports

'டெஸ்ட்டில் கேப்டனான முதல் போட்டியை மறக்கவே முடியாது' - பாண்டிங் - Ricky ponting tweet

தான் கேப்டனாக அணியை வழிநடத்திய முதல் டெஸ்ட் போட்டியின் அனுபவங்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.

'Remember first Test as skipper for Martyn & Lehmann's batting'

author img

By

Published : Mar 28, 2020, 11:47 PM IST

சர்வேதச கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களின் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங். இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. இவரது கேப்டன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி 324 போட்டிகளில் 220இல் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தான் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டி குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார். அந்தப் பதவில், "நான் கேப்டனாக இருந்த முதல் டெஸ்ட் போட்டியில் அணி வீரர்கள் எனது ஜெர்சியில் கையெழுத்திட்டு, என்னை பற்றி குறிப்புகளையும் எழுதினர். மேலும் கடினமான சூழ்நிலையில், டேமியன் மார்டின், டேரன் லீமேன் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இப்போட்டியை என்றும் நினைவில் அதிகமாக வைத்திருப்பேன்" என பதிவிட்டிருந்தார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஸ்டீவ் வாஹ் ஓய்வுபெற்ற நிலையில், பாண்டிங் 2004இல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமானார். கலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டேமியன் மார்டின், டேரன் லீமேன் ஆகியோர் சதம் விளாசியதால் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

முன்னதாக, அவர் 2003 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பயன்படுத்திய பேட்டின் புகைப்படத்தையும் ட்விட்டரில் நினைவுகூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய ரசிகர்களை ஆற்றுப்படுத்திய ’ஸ்ப்ரிங்’ பேட் வதந்திகள்... தொடரும் புதிர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.