கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடர் இந்த மாதம் செப்டம்பர் மாதம் 19ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வங்கதேச அணி, இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம், தொடரில் பங்கேற்கும் வீரர்கள் நிச்சம் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்தது. ஆனால், இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்து விட்டதால், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடர் தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த முஷ்தபிஷூருக்கு, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சான்றிதழை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது.
ஒருவேளை முஷ்தபிஷூர் ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டிருப்பார். ஆனால் தற்போது தேசிய அணிக்கு விளையாட முடியாமலும், ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமலும் அவர் வருமானத்தை இழந்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2015-16ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முஷ்தபிஷூர் விளையாட வங்க தேசம் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை. அதற்கான இழப்பீட்டை (30 லட்சம் டாகா) வங்க தேசம் கிரிக்கெட் வாரியம் முஷ்தபிஷூர் ரஹ்மானுக்கு வழங்கியது.
ஆனால் தற்போது அதேபோல் வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அவர் இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: மீண்டும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றிய ரபாடா!