ETV Bharat / sports

தோனியால் ஸ்பெஷலான எனது டெஸ்ட் அறிமுகம் - கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி!

author img

By

Published : May 12, 2020, 11:32 AM IST

எனது அறிமுக டெஸ்ட் போட்டியில் கேப்டன் தோனியிடமிருந்து டெஸ்ட் கேப் (தொப்பி) பெற்றுக்கொண்டது வாழ்வின் சிறப்பான தருணம் என கே.எல். ராகுல் நினைவுகூர்ந்துள்ளார்.

Receiving Test cap from Dhoni was a 'special feeling', reveals KL Rahul

சமீப மாதங்களாக தனது சிறப்பான பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் திறமையாலும் தன்னை மேம்படுத்திக்கொண்டு இந்திய அணியில் நம்பிக்கைகுரிய வீரராக வலம்வருபவர் கே.எல்.ராகுல். இவர் கடந்த 10 ஒருநாள், டி20 போட்டிகளில் ஒரு சதம், நான்கு அரைசதம் விளாசி அசத்தினார்.

தோனியின் கேப்டன்ஷிப்பின் கீழ் 2014இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் கே.எல். ராகுல் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவந்தார்.

  • It was a special and emotional moment for me. I never thought I would get a chance to play in the series and it was a special feeling to get that cap from MS Dhoni https://t.co/5yirGYh7Q9

    — K L Rahul (@klrahul11) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது ரசிகர் ஒருவர் தோனியிடமிருந்து டெஸ்ட் கேப் (தொப்பி) வாங்கியதை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்வி கேட்டார். அதற்கு கே.எல்.ராகுல், "டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது எனக்கு சிறப்பான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். அந்தத் தொடரில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அதுவும் தோனியிடமிருந்து டெஸ்ட் கேப் பெற்றுக்கொண்டது எனது வாழ்வில் சிறப்பான உணர்வு" என பதிலளித்தார்.

கே.எல்.ராகுல் அறிமுகமான அந்த போட்டியில்தான், தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது கவனத்துக்குரியது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் நான்கு ரன்கள் அடித்து சொதப்பியிருந்தாலும், சிட்னியில் நடைபெற்ற அடுத்த டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்தினார்.

28 வயதான இவர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் உள்பட 2,006 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 32 ஒருநாள் போட்டிகளில் 1,239 ரன்களும் 42 டி20 போட்டிகளில் 1461 ரன்களும் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: தற்போதைய இந்திய அணியில் முழுமையான ஃபீல்டர்கள் இல்லை - கைஃப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.