ETV Bharat / sports

எந்த இடமாக இருந்தாலும் சரி; டிம் பெய்ன் சவாலை ஏற்ற விராட் கோலி! - ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்

மும்பை: ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாரா என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் விடுத்த சவாலை இந்திய கேப்டன் கோலி ஏற்றுள்ளார்.

Ready to play D/N Test in Australia, be it Perth or Gabba: Virat Kohli

author img

By

Published : Jan 13, 2020, 8:48 PM IST

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனைப் படைத்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லாததால், இந்திய அணி எளிதாக கோப்பையைக் கைப்பற்றியது என விமர்சனங்கள் வந்தன.

இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருடன் லபுசானேவும் அணிக்கு திரும்பிய நிலையில், ஆஸ்திரேலிய அணி பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்க அச்சம் கொண்டுள்ளது என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய கேப்டன் விராட் கோலி வம்புக்கு இழுத்ததோடு, சவாலும் விடுத்திருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

தற்போது இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், '' வங்கதேச அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கடந்த ஆண்டு விளையாடினோம். தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டிகள் தொடரின் முக்கிய அம்சமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவ்வகையானப் போட்டிகளை ஆட எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் சவாலை ஏற்கிறோம். அது பெர்த் மைதானத்தில் நடந்தாலும் சரி, கப்பா மைதானத்தில் நடந்தாலும் சரி, அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. உலகின் அனைத்து அணிகளுடனும் போட்டியிடுவதற்கு நாங்கள் எங்கள் திறமையை வளர்த்துக்கொண்டுள்ளோம்.

விராட் கோலி

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது எங்களது மன உறுதியை அதிகரித்துள்ளது. இந்த முறை பயணம் செய்யும்போது எங்கள் அணி பந்துவீச்சாளர்களுக்கு சவால் காத்திருக்கிறது என்பதை நன்றாக அறிகிறேன். கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லை. லபுசானேவும் ஒரு போட்டியில் தான் பங்கேற்றார். ஆனால் இவர்கள் மூவரும் கடந்த ஆண்டு அணிக்கு திரும்பியபின் ஆடிய ஆட்டம் ஆச்சரியமளித்தது.

அதனால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று எளிதாகத் தொடரை வென்றுவிடலாம் என எதிர்பார்க்கக் கூடாது. உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் போட்டியிடுவது மிகச்சிறந்த ஒன்று. நாங்கள் இருவரும் பங்கேற்கும் தொடர் நிச்சயம் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் சிறந்த தொடராக இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க: தனிப்பட்ட வாழ்வு சரியாக அமையவில்லை: நெய்மர்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/ready-to-play-d-slash-n-test-in-australia-be-it-perth-or-gabba-virat-kohli/na20200113165800093

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.