இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
இதில் இந்திய அணியின் விராட் கோலி 936 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். இவர் இன்னும் இரண்டு புள்ளிகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.
அதே போல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய தமிழ்நாட்டின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் 792 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை:
- கம்மின்ஸ்-ஆஸ்திரேலியா-908 புள்ளிகள்
- காகிசோ ரபாடா- தென் ஆப்பிரிக்கா-835 புள்ளிகள்
- ஜஸ்பிரித் பும்ரா- இந்தியா-818 புள்ளிகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - இந்தியா - 792 புள்ளிகள்:
-
⬆️ Ashwin
— ICC (@ICC) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
⬇️ Philander
After taking six wickets in India's win over South Africa in Pune, R Ashwin has continued his rise in the @MRFWorldwide ICC Test Rankings for bowlers. pic.twitter.com/1whGqEfnxk
">⬆️ Ashwin
— ICC (@ICC) October 14, 2019
⬇️ Philander
After taking six wickets in India's win over South Africa in Pune, R Ashwin has continued his rise in the @MRFWorldwide ICC Test Rankings for bowlers. pic.twitter.com/1whGqEfnxk⬆️ Ashwin
— ICC (@ICC) October 14, 2019
⬇️ Philander
After taking six wickets in India's win over South Africa in Pune, R Ashwin has continued his rise in the @MRFWorldwide ICC Test Rankings for bowlers. pic.twitter.com/1whGqEfnxk
மேலும் இவர் டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலிலும் 328 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் ஐந்தாவது இடத்தில் நீடித்து வருகிறார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை:
- ஜேசன் ஹோல்டர்- வெஸ்ட் இண்டீஸ்-472 புள்ளிகள்
- ரவீந்திர ஜடேஜா- இந்தியா- 414 புள்ளிகள்
- ஷாகிப் அல் ஹசன் - வங்கதேசம்- 397 புள்ளிகள்
- பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து - 387 புள்ளிகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் - இந்தியா - 328 புள்ளிகள்
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் கடைசியாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜெட் வேகத்தில் முன்னேறிய ரோஹித்; டாப்-10இல் இடம்பிடித்த அஸ்வின்!