ETV Bharat / sports

ரஞ்சி கோப்பை: ரயில்வே அணியிடம் படுதோல்வியடைந்த மும்பை! - ரயில்வே அணி வெற்றி

மும்பை - ரயில்வே அணியினர் மோதிய மூன்றாம் சுற்று ரஞ்சி போட்டியில் ரயில்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

mumbai vs railways
mumbai vs railways
author img

By

Published : Dec 29, 2019, 10:46 PM IST

இந்தியாவின் முதல் தர உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் மும்பை அணி, ரயில்வே அணியை எதிர்த்து விளையாடியது.

இதில் டாஸை வென்ற ரயில்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி பிரித்வி ஷா, ரஹானே ஆகியோரது விக்கெட்டுகளை ஆரம்பத்திலே இழந்து தடுமாறியது. அந்த அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39, தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 114 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது. ரயில்வே அணி சார்பில் பிரதீப் அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேச அணி அரிந்தம் கோஷ் 72, கேப்டன் கரண் சர்மா 112 ஆகியோரது ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 266 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. மும்பை பந்துவீச்சில் தேஷ்பண்டே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியதால் அந்த அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் சூர்யகுமார் 65 ரன்கள் எடுத்தார். ரயில்வே பந்துவீச்சில் ஹிமான்ஷு சங்வான் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ரயில்வே அணி 11.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த ரயில்வே அணியின் கேப்டன் கரண் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:ரஞ்சி கோப்பை: கவுசிக் சதத்தால் டிராவில் முடிந்த தமிழ்நாடு போட்டி!

Intro:Body:

mumbai vs railways

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.