ETV Bharat / sports

சொந்த மண்ணில் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்த மும்பை!

மும்பை: 2019ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரில் பலம் வாய்ந்த மும்பை அணியை கர்நாடக அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ranji-trophy-2019-20-fourth-round-second-straight-defeat-for-mumbai-at-home

author img

By

Published : Jan 5, 2020, 11:46 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் நான்காவது சுற்றுக்கானப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் கர்நாடக அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா 29 ரன்னிலும், ரஹானே 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 77 ரன்கள் எடுத்தார். கர்நாடக அணி சார்பாக கவுசிக் 3, மிதும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய கர்நாடக அணி 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சம்ர்த் 86 ரன்களும், ஷரத் 46 ரன்களும் எடுத்தனர். பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய மும்பை அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 149 ரன்களுக்கு சுருண்டது. இதில் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்து போராடினார்.

பின்னர் களமிறங்கிய கர்நாடக அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில் அதிரடியாக ஆடிய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 46 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த கர்நாடக அணி, கடைசியாக ஸ்ரேயாஸ் கோபால் - ஷரத் ஆகியோரின் ஆட்டத்தில் 129 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதன்மூலம் மும்பை அணி அதன் சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் எப்படி இருக்கும்: ஒரு பார்வை!

Intro:Body:

Ranji Trophy 2019-20, Fourth Round: Second straight defeat for Mumbai at home

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.