தமிழ் சினிமாவில் பழைய படங்களை திரும்பி எதேச்சையாக பார்க்கையில் குறிப்பிட்ட்ட படங்கள் மிகச்சிறந்த படமாகவும், அதனை தமிழ் சமூகம் கொண்டாடவும் இருந்திருக்கும். அதில் புதுப்பேட்டை, கற்றது தமிழ் என வரிசைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல் கிரிக்கெட்டிலும் பல வீரர்களை கொண்டாடாமல் மறந்திருப்போம்.
இதேபோல் சில வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் செய்த அற்புதமான சம்பவங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமலும், ரசிகர்களால் கவனிக்கப்படாமலும் போயிருக்கும். அதுபோல்தான் தற்போது ஆங்கில ஊடகவியலாளர் மார்க் ஆஸ்டின் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் திரிபாதியின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஐந்து மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரின் ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, சிக்ஸருக்கு அடிக்கப்பட்ட பந்தை ராகுல் திரிபாதி பறந்தவாறு பிடித்து அருகில் இருந்த சக வீரரான திவ்யங்கிடம் மாற்றினார்.
-
Catches don’t get more sensational than this👇(wait for slo-mo) pic.twitter.com/UPS6PHVxFC
— Mark Austin (@markaustintv) September 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Catches don’t get more sensational than this👇(wait for slo-mo) pic.twitter.com/UPS6PHVxFC
— Mark Austin (@markaustintv) September 11, 2019Catches don’t get more sensational than this👇(wait for slo-mo) pic.twitter.com/UPS6PHVxFC
— Mark Austin (@markaustintv) September 11, 2019
இந்த கேட்ச் அப்போது பரவலாக கவனம் பெறாமல் போனது. ஆனால் உள்ளூர் தொடர்களில் இந்த மாதியான ஒரு அபாரமான கேட்ச் என்பது பெரும் விஷயம். இந்த கேட்ச் ஐந்து மாதங்களுக்கு பிறகு இன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ராகுல் திரிபாதி ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக தோனி தலைமையில் கீழ் விளையாடி சிறந்த வீரர் என்ற பெயர் பெற்றார். அதையடுத்து தற்போது ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.