ETV Bharat / sports

‘இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர்’ ராகுல் டிராவிட்! - ராகுல் டிராவிட் பிறந்தநாள்

இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

Rahul Dravid turns 48: Wishes pour in for 'The Wall'

author img

By

Published : Jan 11, 2021, 1:33 PM IST

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும், தற்போதுள்ள இந்திய அண்டர்-19 அணியின் தலைமைப் பயிற்சியாளருமாகவும், தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவராகவும் வலம்வருபவர் ராகுல் டிராவிட். இவர் விளையாடிய காலத்தில், இவரது பேட்டிங்கைக் கண்டு எதிரணியின் பந்துவீச்சாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளானர்கள் என்பது நிதர்சனமான உண்மை.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பிரெட் லீ, சோயிப் அக்தர் போன்ற அதிவேகப் பந்துவீச்சாளர்களைக்கூட தனது டிஃபென்ஸிவ் ஆட்டத்தால் திணறச் செய்தவர் டிராவிட். இதன் காரணமாகவே ராகுல் டிராவிட்டை இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்று செல்லமாக ரசிகர்கள் அழைத்துவருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர்
இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர்

பொதுவாக டிஃபென்ஸிவ் ஆட்டத்திற்குப் பெயர்போன ராகுல் டிராவிட், சில சமயங்களில் தனது ஆக்ரோஷமான ஆட்டங்களையும் வெளிப்படுத்தியதுண்டு. 2003ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின்போது 22 பந்துகளைச் சந்தித்து அரைசதம் கடந்து, தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது இன்றளவும் இந்திய ரசிகர்களால் பேசப்பட்டுவருகிறது.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளைச் சந்தித்தவர் என்ற சாதனையையும் தன்னிடம் வைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை 300-க்கும் அதிகமான ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்துள்ளார்.

சச்சின் - டிராவிட் காம்போ
சச்சின் - டிராவிட் காம்போ

இந்தியாவுக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களையும் ராகுல் டிராவிட் குவித்துள்ளார். இதில் 48 சதங்களும், 146 அரை சதங்களும் அடங்கும்.

இந்தியாவிற்காகச் சிறப்பாக விளையாடி நாட்டை பெருமையடைச் செய்ததற்காக ராகுல் டிராவிட்டிற்கு 1998ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2004ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2013ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

  • 🏏 More than 10,000 runs in Tests and ODIs
    🌟 194 fifty-plus scores
    👐 Most Test catches by a non-wicketkeeper
    🔴 Most balls faced in Test cricket
    🔥 Only player to be involved in two 300-plus ODI partnerships

    Happy birthday to the incredible Rahul Dravid 🎂 pic.twitter.com/YeSVrSwlbT

    — ICC (@ICC) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் ராகுல் டிராவிட் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவரது பிறந்தநாளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, விரேந்திர சேவாக், விவிஎஸ் லக்ஷ்மண், இர்ஃபான் பதான் மற்றும் பிசிசிஐ, ஐசிசி, ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பிசிசிஐயின் பிரதிநிதியாக ஜெய் ஷா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.