ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர், சைமன் ஹுயூஸ் உடன் இணைந்து 'A New Innings' என்ற புத்தகத்தை ராகுல் டிராவிட் வெளியிட்டார். அதில் ராகுல் டிராவிட் பேசுகையில், '' டி20 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கிற்கு கொண்டு சென்றால், மிகச்சிறந்த நடவடிக்கையாக இருக்கும். நிச்சயம் அதில் சில சவால்கள் உள்ளது. அதேபோல் கிரிக்கெட் விளையாட்டிற்கும் சில தேவைகள் உள்ளது.
இந்த ஐபிஎல் மிகச்சிறந்த வெற்றியை அடைந்ததற்கு பிட்ச்சின் தரம் முக்கிய காரணமாக இருந்தது. நமக்கு இவையனைத்தும் சரியாக அமைந்தால், நிச்சயம் நாம் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம். டி20 கிரிக்கெட்டும் வளர்ச்சியடையும். அதற்கு வாய்ப்பிருந்தால், டி20 கிரிக்கெட்டை ஒலிம்பிக்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: கோலி ஆடும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரிப்பு!