பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் தொடங்கியது.
இதில் இன்று (ஜன.28) தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபவாத் ஆலம் 109 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
-
A fine way for @KagisoRabada25 to get to the mark 👏#PAKvSApic.twitter.com/Wz2nVpvPhc
— ICC (@ICC) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A fine way for @KagisoRabada25 to get to the mark 👏#PAKvSApic.twitter.com/Wz2nVpvPhc
— ICC (@ICC) January 28, 2021A fine way for @KagisoRabada25 to get to the mark 👏#PAKvSApic.twitter.com/Wz2nVpvPhc
— ICC (@ICC) January 28, 2021
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, ஹசன் அலியின் விக்கெட்டை வீழ்த்திய போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்காக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய எட்டாவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பையையும் பெற்றார்.
இதையும் படிங்க: 'ஃபவாத்தின் அர்ப்பணிப்பு பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை' : வஹாப் ரியாஸ்