இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, ‘வாஷிங்டன் சுந்தர் அணிக்கு வேண்டியதைச் செய்யும்போது அஸ்வினை எங்கு நுழைக்க முடியும் என்று நீங்களே சொல்லுங்க’ என்றார். இதனையடுத்து, சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் அஸ்வினை பொறுத்தவரையில் முடிந்துவிட்டதோ என்று பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடினார். அதன்பின், சாஹல், குல்தீப் வந்தவுடன் அஸ்வின், ஜடேஜாவையும் ஓரங்கட்டினர். அதன்பின் ஜடேஜா தனது ஆல்ரவுண்டர் திறனால் மீண்டும் அணிக்குள் இடம்பிடித்தார். ஆனால் அஸ்வினால் மீண்டும் அணிக்குள் நுழைய முடியவில்லை.
இந்நிலையில், ஒருநாள், டி20 போட்டிகளில் அஸ்வினின் கம்பேக் குறித்து எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அஸ்வின், "ஒருநாள், டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வருவது பற்றிய கேள்விகள் எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. ஏனெனில் நான் நிம்மதியாக வாழ்ந்துவருகிறேன்.
எனக்கு எங்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை என் வசப்படுத்துவேன். அதைச் செய்ய முடியும் என்று எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கவலையில்லை" என்று தெரிவித்துள்ளர்.
இதுவரை இந்திய அணிக்காக 111 ஒருநாள், 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 202 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IND vs ENG, மூன்றாவது டி20: பேட்டிங்கில் கவனம் செலுத்தும் இந்தியா