ETV Bharat / sports

இரட்டை இலக்கத்தை தொடாத 8 வீரர்கள்... பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா!

author img

By

Published : Feb 14, 2020, 12:56 PM IST

நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

pujara-vihari-shine-on-day-one-of-indias-practice-game-against-new-zealand-xi

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் தொடருக்கு பின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கு முன்னதாக நியூசிலாந்து லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆடுகிறது. இன்று தொடங்கிய அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா - மயாங்க் அகர்வால் இணை களமிறங்கியது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மூன்றாவதாக வந்த புஜாரா ஒருமுனையில் நிதானமாக ஆட, இளம் வீரர் கில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்தது.

பின்னர் அனுபவ வீரர்களான புஜாரா - ரஹானே இணை களத்தில் இருந்தது. இதில் புஜாரா வழக்கம் போல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த, ரஹானே 18 ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றார். 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி பரிதாபமாக இருந்தது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த விஹாரி - புஜாரா இணை நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தது. நியூசிலாந்து வீரர்களின் மோசமான பந்துகளில் மட்டும் ரன்கள் சேர்த்துவிட்டு மற்ற பந்துகளை எளிதாக எதிர்கொண்டனர். சிறப்பாக ஆடிய புஜாரா, விஹாரி இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஐந்தாவது விக்கெட்டிற்கு 195 ரன்கள் சேர்த்திருந்தபோது புஜாரா 211 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய விஹாரி சதம் விளாசி ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

பின்னர் களம் புகுந்த பந்த் 7 ரன்களிலும், சஹா 0, அஸ்வின் 0, ஜடேஜா 8 என சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 78.5 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து அணியின் ஸ்காட் கூகுலகின், இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியில் 8 வீரர்கள் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் ஏ டிவிஷன் கால்பந்து லீக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.