இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் கடந்த டிச.06 ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் நிறைவடைந்த இப்பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஏ அணியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய புகோவ்ஸ்கி, வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சரில் காயமடைந்தார். இதையடுத்து அணியின் மருத்துவர் களத்திற்கு வந்து புகோவ்ஸ்கியை பரிசோதித்தார்.
-
Fingers crossed for Will Pucovksi, who's retired hurt after this nasty blow to the helmet.
— cricket.com.au (@cricketcomau) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live scores from #AUSAvIND: https://t.co/MfBZAvzAkr pic.twitter.com/pzEBTfipF2
">Fingers crossed for Will Pucovksi, who's retired hurt after this nasty blow to the helmet.
— cricket.com.au (@cricketcomau) December 8, 2020
Live scores from #AUSAvIND: https://t.co/MfBZAvzAkr pic.twitter.com/pzEBTfipF2Fingers crossed for Will Pucovksi, who's retired hurt after this nasty blow to the helmet.
— cricket.com.au (@cricketcomau) December 8, 2020
Live scores from #AUSAvIND: https://t.co/MfBZAvzAkr pic.twitter.com/pzEBTfipF2
பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக புகோவ்ஸ்கி ஆட்டத்திலிருந்து பாதியிலேயே விலகினார். இதனையடுத்து வருகிற 10ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலிருந்து புகோவ்ஸ்கி விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
22 வயதாகும் வில் புகோவ்ஸ்கி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்த பாக்., வீரர்கள்!