ETV Bharat / sports

உங்க பிரச்னையை நீங்க பாத்துக்கோங்க - ஐசிசி பல்டி!

author img

By

Published : Feb 22, 2020, 10:09 PM IST

கராச்சி: பி.எஸ்.எல். டி20 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர் மொபைலில் பேசியதாக எழுந்த சர்ச்சையை பிசிபி பார்த்துகொள்ளும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

PSL 2020: ICC calls 'mobile phone' debacle an 'issue for PCB'

ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டில் உள்ளூர் டி20 தொடர்களை நடத்திவருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் நாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் இந்தாண்டுக்கான பி.எஸ்.எல். போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற கராச்சி கிங்ஸ் - பெஷ்வர் ஸல்மி அணிகளுக்கு இடையிலான போட்டியின் நடுவே, கராச்சி அணியின் உரிமையாளர் தாரிக் வாசி தனது மொபைல் போனில் உரையாடினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இக்குற்றச்சாட்டு குறித்து ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கண்டனங்களும் எழுந்தன.

இதனையடுத்து ஐசிசி அலுவலர் ஒருவர் கூறுகையில், பி.எஸ்.எல். ஆனது பாகிஸ்தானில் நடக்கும் உள்ளூர் போட்டியாகும் என்றார். அதனால் இந்த விவகாரத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பார்த்துக்கொள்ளும் எனவும், இதில் ஐசிசி தலையிடுவதற்கு எந்தத் தேவைகளும் இல்லையெனவும் பல்டியடித்துள்ளது.

இது குறித்து, கராச்சி அணியின் பயிற்சியாளர் டீன் ஜோன்ஸ் கூறுகையில், "எங்கள் அணியின் உரிமையாளர் தாரிக் அவரது வேலையை சிறப்பாகவே செய்தார். மேலும் எல்லா டி20 போட்டிகளிலும் அணியின் உரிமையாளர், தலைமை நிர்வாக அலுவலர்கள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கப்படுகின்றனர். இது ஐசிசியின் விதி வரைமுறை பட்டியலிலும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

அதேசமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், தாரிக்கின் செயல் தவறு என்று சுட்டுக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.