ETV Bharat / sports

மகளின் ஆட்டத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது - பூனம் யாதவின் தாயார் நெகிழ்ச்சி! - இந்திய மகளிர் அணி vs ஆஸ்திரேலிய மகளிர் அணி

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் தனது மகளின் ஆட்டத்திறனை பார்க்கும்போது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாக இந்திய வீராங்கனை பூனம் யாதவின் தாயார் முன்னி தேவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Proud of my daughter's performance, says mother of Poonam Yadav

author img

By

Published : Feb 22, 2020, 10:52 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், சிட்னியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி, நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர்களான ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் சொதப்பினாலும், தீப்தி ஷர்மாவின் (49) அசத்தலான ஆட்டத்தால் 132 ரன்களை எட்டியது.

இதைத்தொடர்ந்து, 133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை தனது அபாரமான சுழற்பந்துவீச்சினால் பூனம் யாதவ் திணறடித்தார். நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் வழங்கி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியதால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரின்போது காயத்தால் அவதிப்பட்ட பூனம் யாதவ் இப்போட்டியில் ஆட்டநாயகி விருதைப் பெற்று கம்பேக் தந்தார். இவரது ஆட்டத்தைக் கண்டு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

Proud of my daughter's performance, says mother of Poonam Yadav
பூனம் யாதவ் தாயார் முன்னி தேவி

இது குறித்து அவரது தாயார் முன்னி தேவி கூறுகையில், "இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தததால் நான் மிகவும் பதற்றமடைந்தேன். ஆனால், இந்திய அணி எப்படியோ எழுச்சிப் பெற்று 132 ரன்களை எடுத்தது.

பின்னர் எனது மகள் பூனம் யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி-பெறவைத்தார். அவர் மட்டுமின்றி இந்திய வீராங்கனைகள் அனைவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்தனர். ஒரு தாயாக எனது மகளின் ஆட்டத்தைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது" என்றார்.

இதையும் படிங்க: ஜடேஜாதான் எனக்குப் பிடித்த கிரிக்கெட்டர் - ஆஷ்டன் அகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.