ETV Bharat / sports

ப்ரியம் கார்க் சதத்தால் வெற்றியுடன் கணக்கை தொடங்கிய இளம் இந்தியா - ப்ரியம் கார்க் சதம்

நான்கு அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

Priyam Garg
Priyam Garg
author img

By

Published : Jan 4, 2020, 4:06 PM IST

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், டர்பனில் நேற்று நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ப்ரியம் கார்க்கின் அசத்தலான சதத்தால் 50 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தது. ப்ரியம் கார்க் 103 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 110 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து, 265 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால் இந்திய அணி இப்போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Priyam Garg
ப்ரியம் கார்க்

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ப்ரிஸ் பர்சன் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் சதம் அடித்து அசத்திய இந்திய அண்டர் 19 அணியின் கேப்டன் ப்ரியம் கார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதையடுத்து, நடைபெற்ற இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அண்டர் 19 அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வேவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதையும் படிங்க: பேட்ஸ்மேன் முதலமைச்சர், பவுலர் அமைச்சர்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/priyam-garg-slams-hundred-as-india-u-19-beat-sa-by-66-runs/na20200103233239229

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.